தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! வானிலை மையம் எச்சரிக்கை…!

cyclone rain 2025

தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

நாளை முதல் அக்டோபர் 1 வரை ஓரிரு இடங்களிலும், அக்டோபர் 2 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

40 வயது ஆண்களே உஷார்!. இந்த அறிகுறிகள் இருக்கா?. அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.

Mon Sep 29 , 2025
ஆண்களிடையே புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 40 வயதை தொட்டவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் போகையில் முடிக்கையில் வலி, அசவுகரிகம், முதுகு வலி, சிறுநீர் அல்லது விந்தில் ரத்தம், திடீர் உடல்நல எடைக் குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற […]
prostate cancer 11zon

You May Like