நடுவானில் மோதிக்கொண்ட ராணுவ விமானங்கள்!. 4 விமானிகள் உயிரிழப்பு!. பிலிப்பைன்ஸில் சோகம்!. பகீர் வீடியோ!.

military planes crash

பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் உள்ள ஃபெர்னாண்டோ விமானப் படை தளத்தில், பயிற்சியின்போது பிலிப்பைன்ஸ் விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த கோர விபத்தில் குறைந்தது நான்கு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


விமானங்கள் மோதி கீழே விழுந்த அந்தத் தருணம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து பிலிப்பைன்ஸ் விமானப் படை (PAF) வெளியிட்ட அறிக்கையில், SF-260 வகையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் விபத்தில் சிக்கியதாகவும், அவை விமானப் படை தளத்திற்குள்ளேயே விழுந்ததால் வேறு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், பாதுகாப்புக் கருதி அனைத்து SF-260 விமானங்களின் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” என்று விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு விமானிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், நாட்டின் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்த விமானிகளின் தியாகத்தைப் போற்றுவதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விமானப் படை தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ராணுவ விமானப் படையில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற விபத்துகள் தொடர்கின்றன. கடந்த மே மாதத்தில், பெங்குவட் (Benguet) மாகாணத்தில் பயிற்சிப் பறத்தலின்போது இதே போன்ற SF-260 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு ராணுவ விமானிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

IND VS NZ 2வது டி20 போட்டி!. திலக் வர்மா அபாரம்!. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!.

Sat Oct 24 , 2026
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுலிங்கை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இஷான் கிஷனுக்கு பதில் […]
india won 30kb

You May Like