விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..‌! குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.600 ஆக உயர்வு..! முழு விவரம்

modi money

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 2026-27 – ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவத்தில் பயிரிடப்படும் கட்டாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.


விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2026-27-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.குங்குமப்பூவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 600 ரூபாயாகவும், அதைத் தொடர்ந்து பயறு (மசூர்) குவிண்டாலுக்கு 300 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேப்சீட் & கடுகு, பருப்பு, பார்லி மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கு முறையே குவிண்டாலுக்கு 250, 225, 170 மற்றும் 160 ரூபாயாக அதிகரித்துள்ளது.2026-27 – ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக அனைத்து ரபி பருவ பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.மனித உழைப்பிற்கான கூலி, காளை மாடுகளின் உழைப்பு / இயந்திர உழைப்பு போன்றவற்றிற்கான செலவுகள், நிலம் குத்தகைக்கான வாடகை, விதைகள், உரங்கள், நீர்ப்பாசன கட்டணங்கள், கருவிகள் மற்றும் பண்ணை கட்டிடங்கள் போன்ற பல்வேறு உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்கான செலவுகள், பணி மூலதனத்திற்கான வட்டி, பம்ப் செட்களை இயக்குவதற்கான டீசல் / மின்சாரம், இதர செலவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உழைப்பின் கணக்கிடப்பட்ட மதிப்பு போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது.

2026-27-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக கட்டாய ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவில் குறைந்தது 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான 2018-19 – ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு இணங்க உள்ளது. அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட எதிர்பார்க்கப்படும் லாபம் கோதுமைக்கு 109 சதவீதமாகவும், ரேப்சீட் & கடுகுக்கு 93 சதவீதமாகவும், பயறு வகைக்கு 89 சதவீதமாகவும், பருப்பிற்கு 59 சதவீதமாகவும், பார்லிக்கு 58 சதவீதமாகவும், மற்றும் குங்குமப் பூவுக்கு 50 சதவீதமாகவும் உள்ளது. ரபி பருவ பயிர்களுக்கான உயர்த்தப்பட்டுள்ள இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பயிர் பல்வகைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தீபாவளி பட்டாசுக் கடைகள் அமைக்க இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

Thu Oct 2 , 2025
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2025-ஆண்டு தீபாவளிப்பண்டிகை 20.10.2025 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 -இன் கீழ் தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமத்திற்கான விண்ணப்பங்களை https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற […]
diwali 2025

You May Like