அமைச்சர் துரைமுருகனுக்கு பேரறிஞர் அண்ணா விருது.. அருள்மொழிக்கு தந்தை பெரியார் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்..!

tamilnadu cm mk stalin

2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது உள்ளிட்ட விருதுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது..


இந்த நிலையில் இன்று 2026-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.. அதே போல் திருவள்ளுவர் விருதை மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட்டது..

அண்ணல் அம்பேத்கர் விருது விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. பெருந்தலைவர் காமராசர் விருதை எஸ்.எஸ். இதயதுல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. பாவேந்திர பாரதிதாசன் விருதை பாடலாசிரியர் யுகபாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 2026-ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதை நெல்லை கவிஞர் ஜெயந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருதை வெ. இறையன்புக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது. இலக்கிய மாமணி விருது (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

இலக்கிய மாமணி விருது (ஆய்வுத்தமிழ்) சி. மகேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. இலக்கிய மாமணி விருது ( படைப்புத்தமிழ்) இரா.நரேந்திர குமாருக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..

விருதாளர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது..

RUPA

Next Post

“அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும்..” திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி தமிழில் பதிவு..!

Fri Jan 16 , 2026
நேற்று தமிழர் திருநாளான தை பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. இதை தொடர்ந்து இன்று விவசாயிகளுக்கு உழுவதற்கு உதவி செய்து மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மேலும் மனிதன் அறநெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இரண்டே வரி குறளில் சொல்லி நல்வழிப்படுத்திய திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.. அந்த வகையில் இன்று […]
thiruvalluvar modi

You May Like