மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் வாக்குச்சாவடிக்கு வரும் போது கையில் மல்லிகைப்பூ சுற்றி வந்திருந்தது கவனம் பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான மதுரை மத்திய தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு அவர்களின் கணவரும், இயக்குனருமான சுந்தர் சி களமிறங்கியுள்ளார்.
அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளரான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கினை செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது, வழக்கமாக கையில் இரண்டு கடிகாரங்களை அணிவது மூலம் கவனம் ஈர்த்து வந்த PTR, இம்முறை கையில் மல்லிகைப்பூவை சுற்றியபடி வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த வித்தியாசமான தோற்றம் வாக்குச்சாவடி வளாகத்திலேயே பேசுபொருளாக மாறியது. இதுகுறித்து செய்தியாளர்கள், “இன்று மல்லிகைப்பூவுடன் வந்ததற்கு ஏதாவது காரணமா?” என்று கேள்வி எழுப்பியபோது, PTR சிரித்தபடி “மதுரக்காரன்…” என்று ஒரு வரியில் பதிலளித்தார். பின்னர் மல்லிகைப்பூ சுற்றிய கையை உயர்த்திக் காட்டியவாறு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Read more: ரூ. 6 லட்சத்திற்குள் 7-சீட்டர் கார் வேண்டுமா..? பட்ஜெட் விலையில் குடும்பத்துக்கு ஏற்ற கார்..!



