தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.. இந்த தேர்தலில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.. மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன..
இதுவரை திமுக 49 இடங்களிலும், தவெக 66 இடங்களிலும், அதிமுக 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் விஜய்யின் தவெக 2-வது இடத்திற்கு மாறி உள்ளது..
அதன்படி பல தொகுதிகளில் அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.. அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கீதா ஜீவன், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை..
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. எனவே தமிழகத்தில் யார் ஆட்சியை அமைக்கப்போகிறார்கள் என்பது இன்று மதியத்திற்குள் தெளிவாகிவிடும்.



