Flash: 73 தொகுதிகளில் தவெக முன்னிலை.. இரண்டாவது இடத்தில் அதிமுக..! செம ஷாக்கில் திமுக..

vijay tvk 1

கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில், சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 240 அறைகள், 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன.


காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்னப்பட்ட நிலையில், 8.30 முதல் இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 73 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இரண்டாவதாக அதிமுக 58 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. மூன்றாவதாக திமுக 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை வகிக்கிறார்.

முன்னிலை நிலவரம்:

* காட்பாடி தொகுதியில் துரைமுருகன் பின்னடைவு

* திருநெல்வேலி தமிழகம் வெற்றி கழகம் முன்னிலை

* திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை

* தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவு.. தமிழக வெற்றி கழக வேட்பாளர் முன்னிலை

* கொளத்தூர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பின்னடைவு தமிழக வெற்றி கழக வேட்பாளர் முன்னிலை

* சேப்பாக்கம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு தமிழக வெற்றி கழகம் முன்னிலை

* சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னடைவு.. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முன்னிலை

* கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை

* மதுரையில் பி டி ஆர் பழனிவேல் ராஜன் பின்னடைவு

* அவிநாசி முதல் சுற்றில் மத்திய அமைச்சர் வேல்முருகன் பின்னடைவு தமிழக வெற்றி கழகம் முன்னிலை

* ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி பின்னடைவு தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை

* காரைக்குடி முதல் சுற்றில் சீமான் மூன்றாவது இடம் த.வெ.க வேட்பாளர் பிரபு முன்னிலை

Read more: Flash: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு.. திமுக அமைச்சர்கள் தொகுதிகளில் தவெக முன்னிலை..!

English Summary

TVK Vs DMK: TVK leading in 63 seats.. DMK losing ground..!

Next Post

TN Election Results 2026: சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை.. பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை..!

Mon May 4 , 2026
TN Election Results 2026: TVK ahead in all constituencies in Chennai.. Shocking vote count..!
TVK Chennai

You May Like