திடீரென கோர்ட்டுக்கு போன அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா..!! திமுக வழக்கில் மேல்முறையீடு..!!

Aadhav Nirmal Kumar 2026

சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக கூறி, அமைச்சர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


திமுக குறித்து விமர்சிக்க அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, தவெக நிர்வாகிகளுக்கு எதிராக திமுக தரப்பில் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், தனி நீதிபதியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : குற்றவாளிகளுக்கு மரண பயத்தை காட்டுங்கள்! பெண்களை தொடுவதற்கே பயப்படணும்! போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

You May Like