குற்றவாளிகளுக்கு மரண பயத்தை காட்டுங்கள்! பெண்களை தொடுவதற்கே பயப்படணும்! போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

pocso supreme court

தேசிய தலைநகர் டெல்லி மற்றும் என்.சி.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அரசுக்கு மிக கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.


விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் பெண்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டு வருவது பெரும் கவலையளிப்பதாக தெரிவித்தனர். தலைநகரில் வாழும் ஒவ்வொரு பெண்ணும், இரவு 10 மணிக்கு வீதிகளில் நடந்து சென்றாலோ அல்லது மெட்ரோ ரயில், பேருந்து என எதில் பயணித்தாலோ முழுமையான பாதுகாப்பு உணர்வைப் பெறும் வகையிலான சூழலை மத்திய அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

பாலியல் வன்கொடுமைகளில் சிக்கும் கொடூர குற்றவாளிகள் மீது சட்டத்தின் மிகக் கடுமையான பிரிவுகளில் இரக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் இறங்க தயங்கக் கூடாது. ஒரு கொடூர குற்றத்தை செய்ய துணியும் நபர்களின் மனதில் காவல்துறை கடுமையான அச்சத்தையும் பயத்தையும் பதிய வைக்க வேண்டும்.

இனி பெண்களை சீண்டினாலோ அல்லது ஏதேனும் குற்றம் புரிந்தாலோ நாம் உயிருடன் இருக்க முடியாது என்ற மரண பயத்தை குற்றவாளிகளின் மனதில் போலீஸ் விதைக்காத வரை, பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர குற்றங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. பாதுகாப்பு நடவடிக்கைகளை வெறும் காகித அளவில் உத்தரவுகளாகப் பதிவிட்டு காலத்தை கடத்துவதை விடுத்து, களத்தில் இறங்கி மக்கள் பாதுகாப்புக்கான உண்மையான கடமைகளை செய்ய வேண்டும் என்று போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Read More : பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Next Post

திடீரென கோர்ட்டுக்கு போன அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா..!! திமுக வழக்கில் மேல்முறையீடு..!!

Tue Oct 6 , 2026
சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக கூறி, அமைச்சர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுக குறித்து விமர்சிக்க அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது […]
Aadhav Nirmal Kumar 2026

You May Like