2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டு எண் வெளியீடு…!

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டது. இது விரிவான பகுப்பாய்வுக்கான குறியீட்டின் மூலம் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வியின் செயல்திறனை மதிப்பிடுகிறது.


சுமார் 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த சுமார் 26.5 கோடி மாணவர்கள் என பலதரப்பட்ட சூழலைக் கொண்ட இந்திய கல்வி முறை உலகின் மிகப்பெரிய கல்வி அமைப்புச் சூழல்களில் ஒன்றாகும். 2017-18-ம் ஆண்டு முதல் 2020-21-ம் ஆண்டு வரையில் மாநிலங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டை (பிஜிஐ) பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உருவாக்கி வெளியிட்டது.

மாநில செயல்திறன் தரவரிசையின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, பள்ளிக் கல்வியில் அனைத்து மாவட்டங்களின் செயல்திறனையும் தரப்படுத்த மாவட்டங்களுக்கான 83 அம்சங்கள் அடிப்படையிலான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டுப் பட்டியல் வடிவமைக்கப்பட்டது.

இதற்கான தரவுகள் இணையதளம் மூலம் மாவட்டங்களால் நிரப்பப்படுகின்றன. இந்த தரவரிசையின் மூலமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றை நிரப்ப மாநில கல்வித் துறைகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டிற்கான பிஜிஐ-டி அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த அறிக்கையாகும்.

https://www.education.gov.in/statistics-new?shs_term_node_tid_depth=396&Apply=Apply

Vignesh

Next Post

இந்தியன் வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Mon Jul 10 , 2023
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Faculty, Office Assistant, Attender பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஏராளமான காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு B.Sc.., B.Com பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் […]
job Vacancy..!! இந்தியன் வங்கியில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு..!!

You May Like