2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார். மேலும் ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடியில் நடந்த இந்த விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்று அங்கு இரவில் தங்கினார்.
திருச்சி விமான நிலையம் வந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் சந்தித்தனர். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
இதற்கிடையே பிரதமர் மோடியை சந்திக்க ஓ,பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் கடிதம் எழுதியும் பிரதமர் அவரை சந்திக்காமல் தவிர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்ல, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ள டிடிவி தினகரனும் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.
பாஜக புறக்கணித்ததை தொடர்ந்து விஜயின் தவெக உடன் செல்ல ஓபிஎஸ் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே திமுகவை தாக்கி பேசி அரும் அன்புமணியும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துடன் 2026 தேர்தலை சந்திக்க இருக்கும் தவெக உடன் கூட்டணிக்கு ச்செல்ல வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதே போல தேமுதிகவும் இதே நிலைப்பாட்டை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Read more: அதிமுக கூட்டணியில் அமமுக..? அடுத்த நொடியே டிடிவி தினகரன் கொடுத்த ரிப்ளை..!!