சிக்கிய ரூ.81,000 ரொக்கம்…! கோவை வாக்காளர்களுக்கு பணம்..! பாஜக பிரமுகர் கைது…!

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது.

கோவை பூலுவபட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பாஜகவினர். வார்டு வாரியாக கொடுக்க பணத்தை பிரித்து கொண்டிருந்த போது தேர்தல் பறக்கும் படையினர் ரூ.81,000 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பாஜக மண்டல தலைவர் ஜோதிமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி திமுகவினர் வாக்குக்கு பணம்

நீலகிரி மாவட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் திமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதாக பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி ஆய்வாளர் ஜெய முருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கோத்தகிரி ஒன்றிய திமுக செயலாளர் நெல்லை கண்ணன் என்பவரது காரை தனிப்படை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.8 லட்சத்து 500 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், நான் வங்கியிலிருந்து ரூ.10 லட்சம் எடுத்து வந்ததாகவும், அதற்கான ஆவணம் இருப்பதாகவும் நெல்லை கண்ணன் போலீஸாரிடம் கூறினார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?

Thu Apr 18 , 2024
கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளில் மெகந்தி அல்லது மருதாணியை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில சமயங்களில் ஆண்களும் கைகளில் மருதாணி வைக்கின்றனர். ஆனால், சில நாட்களாக கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவியதால் அப்பகுதியில் […]

You May Like