பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் சமீப காலங்களில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தையும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அவர், கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றிருந்த போது மர்ம நபர்கள் அவரது கார் கண்ணாடியை உடைத்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு இது “தறுதலைகளின் வேலைதானா அல்லது தற்குறிகளின் வேலையா தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தனிப்பட்ட தாக்குதலா அல்லது வேறு காரணமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.



