அரசு பள்ளி மாணவர்களுக்கு 25 முதல் 27-ம் தேதி வரை மாதாந்திரத் தேர்வு…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

tn school 2025

அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்க மாணவர்​களுக்​கும் அரை​யாண்​டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டுமென பள்​ளிக் கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.


அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக தேர்வான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகளின்படி அடிப்படை கற்றல் விளைவுகள் பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற இன்னும் கூடுதல் காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் தேர்வான அனைத்து மாணவர்களும் அடிப்படை கற்றல் விளைவை அடையும் வகையில் அடுத்த 6 வாரங்களுக்கு (அரையாண்டுத் தேர்வு வரை) தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். தினம் ஒரு பாடம் என 90 நிமிடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

திறன் இயக்கத்துக்கு தேர்வான அனைத்து மாணவர்களும் மாதாந்திர மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்பது அவசியம். நடப்பு மாதத்துக்கான மாதாந்திரத் தேர்வு நவம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை வழக்கமான நடைமுறையின்படி நடைபெறும். திறன் இயக்கத்தில் அல்லாத மாணவர்களுக்கு வழக்கமான நடைமுறையின்படி அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்..!! மருத்துவ நிபுணர்கள் பகிரங்க எச்சரிக்கை..!!

Sun Nov 23 , 2025
ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நீண்டகால விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபயாடிக்குகள் உயிர்காக்கும் மருந்துகள் என்றாலும், அவற்றின் தவறான பயன்பாடு குடல் நுண்ணுயிரியல் சமநிலையைச் சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேம்பட்ட லேப்ராஸ்கோபி மற்றும் அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அப்ரித் பன்சால் […]
Antibiotics 2025

You May Like