மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம்‌.‌.! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!

School Exam 2025

பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்; துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். அதன்படி, வரும் டிசம்பர் மாதத்துக்கான கல்விசார் அலுவல் ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி காணொலி மூலமாக நடைபெறும்.

இதற்கான கூட்டப் பொருள், அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொடக்கக்கல்வித் துறை சார்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடப்பு டிசம்பர் மாதம் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடல் ஓய்வூதியத் திட்டம், 2035 முதல் தொடங்கும் பலன்...! மத்திய அமைச்சர் சூப்பர் தகவல்...!

Tue Dec 2 , 2025
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 8.34 கோடி பேர் சேர்ந்துள்ளனர்; இவர்களில் 48% பேர் பெண்கள். 09.05.2015 அன்று தொடங்கப்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டம், அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள், சலுகை பெற்றவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு உலகளாவிய சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இதற்குத் தகுதி பெறுகிறார்கள். […]
Nirmala sitharaman 1

You May Like