மாதம் தோறும் ரூ.750 உதவித்தொகை… ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு…!

money college 2025

ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்து வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.


தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள், சீருடை, ஷூ, பயிற்சிக் கருவிகள் மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 9499055642, 9499055618 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"ஒரு அணையாவது கட்டியுள்ளாரா..?" அன்புமணியின் கேள்விக்கு லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்..!!

Tue Aug 5 , 2025
"Has anyone built a dam?" Minister Durai Murugan responded to Anbumani's question with a list.
durai

You May Like