பெரும் சோகம்…! சூடானில் நடந்த தாக்குதல் 33 பள்ளி மாணவர்கள் மரணம்…!

death 2025

சூடானில் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழப்பு.


சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உளு்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்று இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 55-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழப்பு.

சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அவசரகால மருத்துவப் பணியாளர்கள் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சூடானில் அந்நாட்டு இராணுவம் மற்றும் துணை ராணுவப் படையான ராபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நடந்து வருகிறது. தற்போது இந்தப் போர் எண்ணெய் வளம் நிறைந்த கோர்டோஃபான் மாகாணங்களை நோக்கித் தீவிரமடைந்து இருக்கிறது. உடனடியாக இந்தத் தாக்குதல்களை நிறுத்தி, மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோருக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற வழியை அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரையும் ஐ.நா. வலியுறுத்தியிருக்கிறது.

Vignesh

Next Post

ஒரே இரவில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்...! அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு...!

Sun Dec 7 , 2025
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெக-வில் இணைந்தது […]
Periyasamy 2025

You May Like