காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் பால மணிகண்டன். அருகில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த பள்ளி ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு சென்ற சிறுவன் தனது தாயிடம் குளிர்பானத்தை குடித்ததில் இருந்து மயக்கமாக இருப்பதாக கூறியுள்ளான். திடீரென மயக்கம் போட்டு விழுந்த மாணவனை அவரது தாய் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். மாணவன் அருந்திய குளிர் பானத்தில் விஷம் கலந்தது தெரிய வந்தது. மாணவனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது யார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். மாணவனின் தாய் எனக் கூறி பள்ளியின் காவலாளி குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் குளிர்பானத்தை தான் யாரிடமும் கொடுத்து அனுப்பவில்லை என்றார். பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டன் வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா தன்னை பால மணிகண்டனின் தாய் எனக்கூறி காவலாளிடம் குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சகாய ராணியை பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது தனது மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படித்ததால் கோபத்தில் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கினை விசாரித்த காரைக்கால் நீதிமன்றம் சகாயராணிக்கு ஆயுள் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.
Read more: Flash : ஷாக்..! இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?



