Traffic police: வாகன ஓட்டிகளே! இனிமேல் தப்பிக்கவே முடியாது!… வீடு தேடிவரும் அபராத ரசீது!… போக்குவரத்து போலீசார் அதிரடி!

Traffic police: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராதத் தொகைக்கான ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் தொடங்கியுள்ளனர்.

சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்தும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் மொபைல் போன் எண்ணிற்கு, போலீசார் தகவல் அனுப்புகின்றனர். கட்டத் தவறினால், கால்சென்டர் வாயிலாக நினைவூட்டுகின்றனர். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் நேற்று துவக்கினர். சென்னையில் சோதனை ரீதியாக இந்த நடைமுறை துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் கூறுகையில்,’வீடு தேடிச் சென்று அபராத ரசீது தருவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை, எந்த வகையில் சரியாக செயல்படுத்த முடிகிறது என்பதை பார்த்து, மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்’ என்றனர்.

Readmore:  கோடை காலத்தில் ஏசி வாங்குறீங்களா.? நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்.!

Kokila

Next Post

Rain : தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்

Mon Feb 26 , 2024
Rain: கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று மற்றும் நாளை […]

You May Like