குளு குளு கோவை வெப்பமாக மாற திராவிடக் கட்சிகள் தான் காரணம்!… Annamalai விளாசல்!

Annamalai: குளு குளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பல்வேறு தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சி கட்சியினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. தற்போது இரண்டு முதல் மூன்று டிகிரிகள் வரை வெயில் அதிகரித்து விட்டது. மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது. மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி படர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசுகள் தான். இதையெல்லாம் மாற்றுவதற்காக மக்கள் பாஜகவை தேர்வு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார். கோவையில் வெப்பம் அதிகரிப்பதற்கு திராவிட அரசுகள் தான் காரணம் என அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: நைட் டைம்ல Mobile பாக்குறீங்களா?… நிரந்தர தூக்கத்தை தொலைக்கும் ஆபத்து!… ஆய்வில் அதிர்ச்சி!

Kokila

Next Post

Money: வாக்காளர்களுக்கு பணம்...! வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு...!

Mon Mar 25 , 2024
வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் குறித்து தினசரி தகவல் தெரிவிக்குமாறு வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), டெல்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் […]

You May Like