MS Dhoni | ” மேட்ச் நடக்கிற நாள்ல தோனி லேட்டா தான் எழும்புவார்; அதுக்கும் ஒரு காரணம் இருக்கு…” ருத்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்.!!

MS Dhoni: 2024 ஆம் வருட ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 41 லீப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் தகுதி சுற்றிற்காக அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

இந்த வருட ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கிய சிஎஸ்கே அணி கடந்த சில போட்டிகளில் சரிவை சந்தித்திருக்கிறது தங்களது கோட்டையான சேப்பாக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று வந்த சிஎஸ்கே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. தற்போது 8 பள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

கடந்த 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி(MS Dhoni) இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்பாக கேப்டன் பொறுப்பை ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். இந்தத் தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சுவாரசியமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார் ருத்ராஜ் கெய்க்வாட். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர்” மகேந்திர சிங் தோனி போட்டிக்கு முந்தைய இரவு மிகவும் தாமதமாக தூங்குவார். மேலும் போட்டி நடைபெறும் நாள் அன்று மிகவும் தாமதமாக எழும்புவார். 2019 ஆம் வருடம் முதல் இதை நான் கவனித்து இருக்கிறேன்.

இது தொடர்பாக தோனியிடம் கேட்டபோது போட்டி நடைபெறும் நாளன்று விளையாட்டைப் பற்றிய எண்ணங்கள் இருக்கும் போது சீக்கிரமாக எழுந்து மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். அதனால்தான் போட்டிக்கு முன்பு தாமதமாக தூங்குவதாகவும் போட்டி நடைபெறும் நாள் அன்று தாமதமாக எழும்புவதாகவும் தெரிவித்தார். இதையே நானும் கடைப்பிடிக்க விரும்புகிறேன் என ருத்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

Read More: IIT JAM 2024 நுழைவுத் தேர்விற்கான பதிவு ஏப்ரல் 29 வரை நீட்டிப்பு.!! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? முழு விவரம்.!!

Next Post

புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: இறுதிச்சடங்கிற்கு தயாராகும் அரண்மனை!

Fri Apr 26 , 2024
புற்றுநோய் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் சார்லசின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், மன்னர் மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார். அதன்பிறகு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. […]

You May Like