2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
ஜூலை 11, 2006 அன்று, மேற்கு ரயில்வே பாதையில் மும்பையின் புறநகர் ரயில்களில் நெரிசல் நேரத்தில் 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டனர், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்த நிலையில், 2015 ஆம் ஆண்டில், 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது..
இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.. மீதமுள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசு மரண தண்டனையை உறுதி செய்ய மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது, அதே நேரத்தில் குற்றவாளிகள் தங்கள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. மேலும் இவர்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு “முற்றிலும் தவறிவிட்டது” என்று கூறியது.
நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. முன்னர் வழங்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைகளை உறுதி செய்ய மறுத்து, அனைத்து தண்டனைகளையும் இந்த அமர்வு ரத்து செய்தது.
“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தார் என்பதை நம்புவது கடினம்” என்று நீதிமன்றம் கூறியது, வேறு எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தேவையில்லை என்றால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் தெரிவித்தது..
வழக்கு சாட்டப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்கள் கிட்டத்தட்ட அனைத்து நம்பகத்தன்மையற்றவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. குண்டுவெடிப்பு நடந்து 100 நாட்களுக்குப் பிறகும் கூட, டாக்ஸி ஓட்டுநர்கள் அல்லது சம்பவ இடத்தில் இருந்த பிற நபர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண எந்த உறுதியான காரணத்தையும் வழங்கவில்லை” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் வகையை அரசு தரப்பு அடையாளம் காணத் தவறிவிட்டது என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.