ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ஆருண் பாஷா (22). பார்மசியில் டிப்ளமோ முடித்துவிட்டு மேற்கு தாம்பரம் கோகுல் நகர் பகுதியில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்காக படித்து வருகின்றார். இதனிடையே நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் பாஷா தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் தன்னுடைய கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக் கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆருண் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணயில், தற்கொலை செய்து கொண்ட பாஷா கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த போது இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் செல்போனில் சண்டை போட்டு வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு முதல் அதிகாலை வரை இருவரும் செல்போனில் சண்டை போட்டுள்ளனர். இதனால் விரத்தியடைந்த ஆருண் பாஷா கையை அறுத்துக் கொண்டதுடன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Read more: 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா.? அப்ப இந்தப் பிரச்சனைகளை சந்திக்க ரெடியா இருங்க..!



