“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்.. அவர் அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லை” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்..!

eps mithun

2026 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்..


அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.. அப்போது இபிஎஸ் மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது..

கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக இளம் தலைமுறையை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்தை சில நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.. மேலும் மிதுனை இளைஞரணி செயலாளர் அல்லது தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.. எனினும் இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது..

இந்த நிலையில் இதுகுறித்து இபிஎஸ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ என் மகன் மிதுன் அரசியலுக்கு வர உள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது.. அது தவறு..  அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார்.. அவர் கட்சியில் எந்த பதவியிலும் இல்லை.. எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார். ஊடகங்கள் அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம்.. என் மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்..” என்று தெரிவித்தார்..

Read More : “38 நாட்களில் 126 பாலியல் குற்றங்கள்.. சிங்கப்பெண் சிறப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை..” இபிஎஸ் விளாசல்..!

RUPA

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! பெட்ரோல், டீசல் விலை குறையுமா..? மத்திய அரசு முக்கிய தகவல்..!

Thu Jun 18 , 2026
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் முடிவுக்கு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக சரிந்து வருகின்றன. ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதிலிருந்து கச்சா எண்ணெய் விலைகள் சரிந்து வருகின்றன. இதனால் […]
petrol diesel price

You May Like