கைதாகிறார் நயினார்..? ரவுண்டு கட்டி அடிக்கும் அமைச்சர்கள்..!! டிஜிபிக்கு பறந்த பரபரப்பு புகார்..!!

CM Vijay Nainar 2026

சென்னையில் கழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் தமிழக டி.ஜி.பி.க்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், மனவேதனை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்த உரை தொடர்பான முழுமையான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை ஆதாரமாக இணைத்துள்ள அவர், பெண்களை அவமதித்தல், ஆபாசமான கருத்துகளைப் பரப்புதல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு தலைவரை போல பேசாமல், தெருமுனை பேச்சாளர் போல் பேசியுள்ளார். இது ஏற்புடையதல்ல என்று அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் இயலாமையில் பேசி வருகிறார். எங்கள் செயல்கள் மூலம் அவருக்கு பதிலளிப்போம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியதற்கு நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியலில் எதிரியாக இருக்கலாம்; அதற்காக நாகரிகத்தை எதிரியாக்கிக் கொள்ளக் கூடாது என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

Read More : சட்டசபையில் ஒலித்த குரல்..!! CM விஜய்யின் அதிரடி முடிவு..!! முதல்முறை MLA-க்களுக்கு கார்..!!

Next Post

ஒவ்வொரு ஆண்டும் ஒரு தனித்துவம்!. இந்தாண்டு பிரதமர் மோடியின் தலைப்பாகையில் என்ன ஸ்பெஷல்?

Sat Aug 15 , 2026
சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள தலைப்பாகைகள் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ராஜஸ்தானி பாந்தனி, லெஹரியா ஸ்டைல்கள் மற்றும் மூவர்ண வடிவங்கள் என 2014 முதல் 2026 வரை அவர் அணிந்த தலைப்பாகைகளின் சிறப்பம்சங்களின் தொகுப்பு இதோ. 2026-ஆம் ஆண்டு தனது 13-வது தொடர் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற […]
PMIndependenceDayturbans

You May Like