தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வலம் வருபவர்கள் அரசியலில் களம் காண்பதும், அது குறித்த விவாதங்கள் எழுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், முதல்வர் மற்றும் தவெக தலைவருமான விஜய்யின் ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட், முன்னணி நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கூறியுள்ள கணிப்புகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தனியார் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், நடிகர் தனுஷ் எதிர்காலத்தில் அரசியலில் அடியெடுத்து வைத்துத் தீவிரமாக செயல்பட தொடங்கினால், அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பும் என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மாநிலத்தில் நீண்டகாலமாகக் கோலோச்சி வரும் திராவிட கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை தங்களது செல்வாக்கை இழக்க நேரிடும் என்றும், குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலின் முன்னணி சக்தியாக அல்லது இரண்டாவது பெரிய இடத்திற்கு தனுஷ் உயர்வார் என்றும் அவர் கணித்துள்ளார்.
மேலும், தனுஷின் ஜாதகக் கட்டங்களை ஆய்வு செய்ததில் அவருக்கு மிகச் சிறந்த யோக அமைப்புகளும், வலுவான கிரக நிலைகளும் இருப்பது உறுதியாகத் தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் களம் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இரு துருவங்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாக மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்றப் பெரும் அனுபவமும், அரசியல் ஞானமும் மட்டுமே பிரதான தகுதியல்ல; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணமும், மனமும் இருந்தாலே போதுமானது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் என்ட்ரி மூலம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, நல்ல எண்ணத்துடன் மக்கள் களத்தில் இறங்கும்போது தனுஷாலும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று ஜோதிடர் ராதன் பண்டிட் அந்த நேர்காணலில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
Read More : தமிழகத்தில் 2031ம் ஆண்டு பாமக ஆட்சி தான் நடக்கும்..!! அன்புமணி ராமதாஸ் சூளுரை..!!



