“நயினார் நாகேந்திரன் காமெடி பீஸ். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..” அமைச்சர் செங்கோட்டையன் அட்டாக்..!

sengottaiyan nainaar

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ நடிப்பின் உச்சத்தில் இருந்துவிட்டு, அரசியலுக்கு வந்த முதல்வருக்கு பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.. திமுகவினர் வெளியே சென்று கருத்து கூறியதற்கு பதிலாக உள்ளேயே கூறியிருந்தால் முதல்வர் பதில் சொல்லி இருப்பார்.


திமுகவினரின் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் புறக்கணித்து விட்டனர்.. திமுகவை மக்கள் ஏற்காததால் தான் அக்கட்சி தலைமை தேர்தலில் தொலைநோக்கு பார்வை உடன் தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சி நடக்கிறது..

நாங்கள் பொறுப்பேற்று 45 நாட்கள் தான் ஆகிறது.. எந்தெந்த வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர்.. அதற்குள் மக்களின் பாராட்டை பெறும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.” என்று தெரிவித்தார்..

அப்போது செய்தியாளர்கள், தவெக ஆட்சி செய்ய பாஜகவிடம் உதவி கேட்டதாக நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் “ நயினார் நாகேந்திரன் ஒரு காமெடி பீஸ். அவருக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது.. அவர் வேண்டுமென்றே எங்களை தாக்கி பேசுகிறார்.. திமுக பாஜக விமர்சித்து கொண்டிருக்கிறது.. திமுகவை விமர்சிப்பதற்கு பதில் அவர் எங்களை தாக்கி பேசி வருகிறார்.

திமுக உடன் சமரசமாக இருக்கிறார்.. நாங்கள் ஆட்சி அமைக்க பாஜக உதவி செய்ய வேண்டும் என்று பாஜகவிடம் என்றைக்கும் கேட்டது கிடையாது.. ஆட்சி அமைத்த உடன், பிரதமர், உள்துறை அமைச்சரை பார்க்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்று.. ” என்று தெரிவித்தார்..

Read More : முதல்வர் விஜய் செய்தது உரிமை மீறல்.. பேரவைத் தலைவர் செய்தது நியாயமா..? Ex. சபாநாயகர் அப்பாவு கேள்வி..!

RUPA

Next Post

யூரிக் அமிலப் பிரச்சனை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா? இந்தத் தவறை செய்வது ஆபத்தானது..!

Wed Jun 24 , 2026
யூரிக் அமிலம் தொடர்பான பிரச்சனை தற்போது பலரையும் பாதித்து வருகிறது. ஒரு காலத்தில் இப்பிரச்சனை பெரும்பாலும் முதியவர்களிடமே காணப்பட்டது; ஆனால் இப்போது இளைஞர்களிடமும் யூரிக் அமில அளவு அதிகரித்து வருகிறது. நம் உடலில் ‘பியூரின்’ (purine) எனப்படும் பொருள் சிதைவடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. இயல்பான நிலையில், சிறுநீரகங்கள் இந்த அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகின்றன. இருப்பினும், யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது சிறுநீரகங்களால் அதை முழுமையாக […]
uric acid

You May Like