திரிபுராவில் செல்போனில் படம் பார்த்துக் கொண்டே இருந்ததால் தாத்தா கண்டித்ததால் வீட்டில் இருந்த 4 பேரையும் 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டம் கமால்பூர் அடுத்த ஷிப் பாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் பாதல் தேப்நாத்(70) , இவரது மருமகள் சுமிதா தேப்நாத் (42), பேத்தி சுபர்ணா தேப்நாத் (10) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தேப்நாத்தின் 15 வயது சிறுவன் அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்தான்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்துவீட்டில் குடியிருந்த ரோகா (32)என்பவர் வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது ஒலி பெருக்கி சத்தத்தை அதிகப்படுத்தினான். அந்த பெண்ணை வளைத்து அவரையும் கொன்றான். பின்னர் 4 பேரின் சடலங்களை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து குழி தோண்டி புதைத்துவிட்டு தப்பித்தான்.
சம்பவம் நடந்த வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை ஆச்சர்யம் அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளமாக வீடு காட்சியளித்தது. பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க வநத் போலீஸ் விசாரணை நடத்தினர். வீட்டிற்கு வெளியே குழி தோண்டப்பட்டு இருந்தது. இதை பார்த்தபோது அதிர்ச்சியானது. குடியிருந்த அனைவரும் சடலமாக கிடந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய 15 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தியபோது செல்போனில் அடிக்கடி படம் பார்த்து வந்ததால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தாத்தாவை கொலை செய்ததாகவும் மற்ற இருவர் அவருக்கு ஆதரவாக இருந்ததால் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளான். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.