fbpx

சக மாணவிகள் ராகிங் செய்ததால் கல்லூரி மாணவி விபரீத முடிவு..! கடிதம் சிக்கியதால் பரபரப்பு..!

சக மாணவிகள் ராகிங் செய்ததால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தன்னுடன் படிக்கும் சீனியர் மாணவிகள் 3 பேர் தன்னை ராகிங் செய்து, மனரீதியாக மிகவும் துன்புறுத்தினர். இதனால், தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

அரைநிர்வாண ஆடையில் நடனம்'-ஜூனியர்களை ராகிங் செய்த 18 சீனியர் மாணவர்கள்  சஸ்பெண்ட் #ஆந்திரா | 18 senior students suspended who involved in Ragging  in Anantapur ...

இதையடுத்து, ராகிங் செய்த 3 மாணவிகளும் விடுதியில் தங்கியுள்ளவர்களா என விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், ”கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்றும், மாணவி அப்படி எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். இதற்கிடையே, கட்டாக்கில் தங்கியுள்ள அவரது தாயார் புவனேஸ்வரில் உள்ள படகடா காவல் நிலையத்தில், முறையான விசாரணை நடத்தி தனது மகளின் மரணத்திற்கு காரணமான 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

இருக்கிற பிரச்சனை போதாதா..? இனி இப்படியெல்லாம் என்னை அழைக்காதீர்கள்..! - உதயநிதி ஸ்டாலின்

Sun Jul 3 , 2022
சின்னவர் என்று என்னை அழைக்கச் சொல்லவில்லை என்றும், என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்த வேண்டாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், “நான் மிகவும் ராசிக்காரன் என ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதில், எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குகளை நான் கேட்டதால் வெற்றி இல்லை. கலைஞர், தளபதி, கட்சி தொண்டர்களால்தான் வெற்றி கிட்டியது. கழக மூத்த […]
தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம்..? வரும் 14ஆம் தேதி அமைச்சராகிறார் உதயநிதி..?

You May Like