fbpx

”அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கை”..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு பேசிய அவர், “நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027ஆம் ஆண்டு நனவாகும். அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர்கல்வி பெறுவது 28% அதிகரித்துள்ளது. பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் 30 கோடி பெண் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

300 யூனிட் மின்சாரம் இலவசம்..!! விவசாய துறையில் கூடுதல் முதலீடு..!! நிர்மலா சீதாராமன் அதிரடி..!!

Thu Feb 1 , 2024
2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். * வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் […]

You May Like