பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager உள்ளிட்ட பணிகளுக்கு என மொத்தம் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Finance போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 5 ஆண்டுகள் தேவை.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,60,000 முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: Bank of Baroda – Personal Banking, NetBanking, Corporate Banking, NRI Banking Services Online