கணவன், மனைவிக்குள் நிச்சயமாக ஒருவித புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வு என்பது தொழில் அதிபர்கள் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போல அல்லாமல் கணவன், மனைவியையும் மனைவி, கணவனையும் நன்றாக புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும்.
அதுதான் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும்.திருமணம் நடைபெற்று 1 மாதம், 2 மாதம் இன்னும் சொல்லப்போனால் 1 வாரம் 2 வார காலத்திலேயே தங்களுடைய இளம் மனைவியை இங்கு விட்டு, விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு 4, 5 வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்து தன்னுடைய மனைவியை பார்க்கும் கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி கணவன், மனைவி இருவரும் பிரிந்திருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் அன்பும் பாசமும் ஒரு துளி கூட குறையாமல் இருக்கும்.அப்படி எத்தனை வருடங்கள் பிரிந்து இருந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் அன்பு ஒருவரை ஒருவர் மனதளவில் எப்போதும் இணைத்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பீகார் மாநிலம் மாதேபுரா அருகே உள்ள ரஜினி நாயகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர பாசுகி இவருடைய மகன் கிருஷ்ணா பாசுகி (25). இதே மாநிலத்தில் கோல்பாரா பகுதியைச் சேர்ந்த சேட்டேலால் என்ற நபரின் மகள் அனிதா இவர்களுக்கு சென்ற 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 3 மகள்கள் 1 மகன் என மொத்தம் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.கிருஷ்ணா பாசுகி பஞ்சாப் மாநிலத்தில் மண்டியில் என்ற பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார் இவர் 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்வார் தன்னுடைய கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருவதன் காரணமாக, அவருடைய மனைவி அனிதா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் என்று கூறப்படுகிறது.
அவருடைய கணவர் ஊருக்கு வரும்போது மட்டும் தன்னுடைய வீட்டிற்கு வருவதை அனைத்து வாடிக்கையாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான் கிருஷ்ணா பாசுகி கடந்த சில நாட்களுக்கு முன்னால், வேலை முடிந்து சொந்த ஊருக்கு வருகை தந்தார். அப்போது அவருடைய மனைவி வீட்டில் இல்லை அவர் தன்னுடைய தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார் இதனை தொடர்ந்து, கிருஷ்ணா தன்னுடைய மனைவிக்கு தொலைபேசியின் மூலமாக அழைத்து வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு அனிதா மறுப்பு தெரிவித்திருக்கிறார். சில ஆட்களுக்கு பின்னர் வீட்டிற்கு வருவதாக அனிதா கூறி உள்ளார். ஆகவே இதனால் கோபமடைந்த கிருஷ்ணா பாசுகி ஒரு கூர்மையான ஆயுதத்தை எடுத்து தன்னுடைய அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொண்டார்.
பின்னர் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார் இதனை அறிந்து கொண்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் அவர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பின் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு நடுவில் கிருஷ்ணா வாசுகி ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது தொடர்பாக இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை அவர் இது போன்று செய்ததற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இதுகுறித்து அவருடைய மனைவி அனிதா மற்றும் அவருடைய உறவினர்களுடன் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.