உலக அளவில் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவிலும் ஆட்குறைப்பு தொடர்கின்றது.
டுவிட்டர், ஃபேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. பைஜூஸ், அன் அகாடமி, வேதாந்து, அப்கிராட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
உள்நாட்டில் மார்கன், ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறவனங்களும் ஆயிரக்கணக்கானோரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. அமெரிக்காவில் டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக் மெட்டா நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 11,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஒட்டு மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பர சந்தையில் வருவாய் குறைந்ததை அடுத்து மெட்டா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டதால் தன் செலவினங்களைக் குறைக்க ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளிலும் ஏராளமான இந்தியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்தியர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.