2022 ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீட்டை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41%ஆக (தற்காலிகம்) இருந்தது (2021 ஆகஸ்ட் மாதத்தை விட அதிகம்). இது, 2022 ஜுலை மாதத்தில்13.93%ஆக இருந்தது. கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.