இந்திய படைப்புக்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம், உயர்கல்வித் துறை, இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதம மந்திரியின் யுவா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 22 வெவ்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இளம் மற்றும் வளரும் 30 வயதுக்கு கீழ் உள்ள எழுத்தாளர்களின் பெரிய அளவிலான பங்கேற்புடன் யுவாவின் முதல் பதிப்பின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு, யுவா 2.0 இப்போது தொடங்கப்படுகிறது.
இளம், வரவிருக்கும் மற்றும் பல்துறை ஆசிரியர்கள் அறிமுகம், இந்தியாவின் ஜனநாயகத்தைப் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இசைந்து போகிறது. யுவா 2.0 என்பது இந்தியா@75 திட்டத்தின் ஒரு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சியாகும். இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அறிவு அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு மொழிகளில், பல்வேறு துறைகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க இந்தத் திட்டம் உதவும்.