காந்தி ஜெயந்தியான இன்று பிரசாந்த கிஷோர் தனது நடைபயணத்தை துவங்கியுள்ளார்.
வருகிற 2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜகவை வீழ்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் வியூக நிபுணராக உள்ள பிரசாந்த் கிஷோரை சந்தித்து நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் வெற்றி வியூகம் அமைத்து கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியானது.
இதையடுத்து, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர், ”இனி எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும் நான் பணியாற்ற போவதில்லை என்றும் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், பீகாரில் நடைமுறையில் இருக்கும் எனது அமைப்பை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், பீகாரில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், காந்தி ஜெயந்தியான இன்று தனது நடைபயணத்தை பிரசாந்த் கிஷோர் துவங்கியுள்ளார்.