சமூகவலைத்தளம் மூலம் பழகிய மாணவி திடீரென பேசுவதை நிறுத்தியதால், கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலம் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சமூகவலைதளம் மூலம் பழக்கமான அர்மான் அலி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. தினமும் இருவரும் குறுஞ்செய்தி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த மாணவி திடீரென அர்மான் அலியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து அந்த மாணவியிடம் அர்மான் அலி கேட்டபோது, சரியான பதில் இல்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அர்மான் தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அர்மான், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மாணவியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, சத்தம் கேட்டு ஓடிமக்கள் அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அர்மான் அலி மற்றும் அவனது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.