மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன் மணமக்கள் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பிறகு அழைத்து வரப்பட்ட மணமகன், மணமேடையில் வந்து அமர்ந்து உள்ளார். இந்நிலையில், மணமகளையும் உறவினர்கள் மணப்பந்தலுக்கு அழைத்து வந்துள்ளனர். மணமேடையில், மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்ய முடியாது என கூறி மேடையை விட்டு உடனடியாக இறங்கியுள்ளார்.

அதுவரை, மணமகனை அந்த பெண் பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால், திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் காரணம் கேட்க, தனக்கு கருப்பு நிறத்தில் உள்ள மணமகன் வேண்டாம் என மணப்பெண் கூறியுள்ளார். இதனால், மணமகள் இல்லாமல் மணமகனின் உறவினர்கள் தனியாக திரும்பியுள்ளனர். இதன்பின்னர், மணமகளை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மணமகள் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கடைசி நேரத்தில் மணமகள் எடுத்த முடிவால் திருமணம் நின்று போனது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.