ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மைனர் சிறுமி ஒருவர் தனது தாய்க்கு முன்பாக ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது தாயும் ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுபூர் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மர்மநபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் அளித்த புகாரில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் அவர்கள் இருவரையும் வழிமறித்து, பின்னர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்களைத் தடுக்க முற்பட்டபோது, அ தாக்கப்பட்டதாகவும், பின்னர் சிறுமியை அவர் கண்முன்னே கற்பழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக , காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர ஜாட் கூறுகையில், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.வந்ததும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளில் இருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் மூவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.