தெய்வ நம்பிக்கை என்பது வேறு, மூடநம்பிக்கை என்பது வேறு என்பதை பொதுமக்கள் எப்போது உணர்ந்து கொள்ளும் காலம் வருகிறதோ, அப்போதுதான் சமுதாயத்தில் சில மூடர்களின் அறிவு கண் திறக்கும்.
அப்போதுதான் போலி சாமியார்களின் ஆட்டம் அடங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. முண்டெல்லாம் காதல் வலையில் வீழ்த்தி தான் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த கும்பல் வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தவரையில் பல மாநிலங்களில் தங்களுடைய உடம்பில் துஷ்ட சக்தி இருக்கிறது என்று தெரிவித்தும் நரபலி என்று தெரிவித்தும் பல்வேறு தவறுகள் நடைபெற்று வருகின்றனர். இந்த தவறுகள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர்.
அதிலும் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை நரபலி கொடுக்கும் கொடூரம் சமீபத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனக்கு உண்டான ஒரு பிரச்சனையின் காரணமாக, அந்த பகுதியில் இருக்கின்ற வக்கீல் ராஜா ஷேக் என்ற சாமியாரை நாடிச் சென்றுள்ளார். அந்த சாமியார், அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக தெரிவித்து அந்த பேய்களை ஓட்டி தங்களை குணப்படுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அப்படி கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அந்த பெண் தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று போலி சாமியாரான ராஜா ஷேக் தெரிவித்துள்ளார். அதேபோல அந்த பெண்மணியும் வீட்டிற்கு வந்திருக்கிறார். தன்னுடைய வீட்டில் ராஜாஷேக் தனியாக இருந்த சூழ்நிலையில், தன்னுடைய வீட்டில் வைத்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
தனக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை அந்த பெண் காவல்துறையிடம் புகார் மூலமாக தெரிவித்திருக்கிறார். ஆகவே தலைமுறைவாக இருந்த ராஜா ஷேக்கை அந்த பகுதியில் இருக்கின்ற சொகுசு விடுதி ஒன்றில் போலீசார் நேற்று பொறிவைத்து பிடித்திருக்கிறார்கள்.
அந்த பெண் வழங்கிய புகாரினடிப்படையில் ராஜாஷேக் மீது உத்திரப்பிரதேச காவல் துறையினர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல் கண்காணிப்பாளர், யஷ்வீர் சிங் தெரிவித்துள்ளார்.