fbpx

ஜம்மு காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலர்கள் திட்டத்தை; செயல்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு..!

ஜம்மு காஷ்மீருக்கான கிராம பாதுகாப்புக் காவலர்கள் திட்டத்திற்கு (வி டி ஜி எஸ் – 2022) மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கிராம பாதுகாப்பு குழுக்களை (விடிஜி) அமைக்க உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது.

அதன்படி, கிராம பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்கள், கிராம பாதுகாப்பு காவலர்களாக நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இன்றியமையாத ராணுவ உடை அணியாத வீரர்களாக விளங்குவார்கள்.

இந்நிலையில், இந்த குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.4500 வரை ஊதியமாக வழங்கப்படும். அதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு மாதம் தலா ரூ.4000 ஊதியம் வழங்கப்படும்.

Rupa

Next Post

மடத்தை விட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த சாமியார்; நிம்மதியான வாழ்க்கையை தேடி போவதாக கடிதம்..!

Mon Aug 15 , 2022
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூரில் குத்தகே மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் சாமியாராக இருந்து வருபவர் சிவமகந்தே சுவாமி என்கிற ஹரீஷ் சுவாமி. இந்நிலையில், மடத்தில் இருந்த சாமியார் திடீரென்று மாயமானார். ஹரீஷ் சுவாமி, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுடன் சாமியார் மடத்தில் இருந்து ஓடி இருக்கிறார் என்று கூறுகின்றனர். இது குறித்து சாமியார் எழுதி வைத்திருந்த கடிதம் மடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் […]

You May Like