பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்கும் விதமாக நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறப்பு அதிரடி சட்டம் இயற்றப்பட்டது.
அதாவது பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று யாராவது கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். அதற்குள் நீதிமன்ற மேல்முறையீடாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது நடைமுறையாக இருந்தாலும் சரி உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அப்படி ஒரு வாரத்திற்குள் அதனை செய்து முடிக்கவில்லை என்றால் காவல்துறையினர் தங்களுடைய கடமையை செய்யலாம் என்ற சட்டம் தான் அது.
இது போன்ற ஒரு சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.ஆனால் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு அதிரடிச்சட்டம் அமலில் இருந்தும் இன்னமும் அங்கே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்றே சொல்லப்படுகிறது.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருக்கின்ற பெனமலூர் காவல்துறையினரிடம் நேற்று ஒரு பெண் பாலியல் வன்புணர்வு புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த புகாரில் பெனமலூர் பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த தன்னை, கடந்த 17ஆம் தேதி அடையாளம் தெரியாத 4 பேர் சாலையில் நடந்து போனபோது வழிமறித்ததாகவும், அதன் பிறகு அதே பகுதியில் இருக்கின்ற ஒரு அறையில் பூட்டி கூட்டு பாலியல் வனப்புணர்வு செய்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும் 3 தினங்களாக குடிபோதையில் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆந்திர மாநில காவல்துறையினர், அந்தப் பெண்ணை விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவருடைய புகாதில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற முகவரிக்கு சென்று காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.