சற்றேற குறைய 10 வருடங்களாகவே இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நம்முடைய தலைநகரான டெல்லி தான். தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் வருடம் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பது டெல்லி தான். டெல்லியை தொடர்ந்து மும்பை 2வது இடத்திலும், பெங்களூரு 3வது இடத்திலும் இருக்கிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி தலைநகர் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்வதில் 2ம் இடத்தில் இருக்கும் மும்பையில் சுமார் 5,543 குற்ற வழக்குகளும், பெங்களூருவில் 3,127 குற்ற வழக்குகளும் பதிவாகி இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருக்கின்ற ஒரு தனியார் அலுவலகத்தில் 23 வயதான ஒரு இளம் பெண் பணிபுரிந்து வந்தார். ஒரு நாள் இரவு பணி நேரம் முடிவடைந்து வீட்டிற்கு செல்வதற்காக வாடகை டாக்ஸியில் அந்த இளம் பெண் ஏறியுள்ளார். யமுனா விரைவு சாலையை நோக்கி அந்த கார் சென்று கொண்டிருந்தபோது, அந்த இளம் பெண்ணை தவிர்த்து மற்ற பயணிகள் எல்லோரையும் அந்த கார் ஓட்டுநர் குபேர்ப்பூர் என்ற இடத்தில் இறக்கி விட்டார். தனியாக இருந்த இளம் பெண்ணை எட்மத்பூர் என்ற இடத்தில் இறக்கி விடுவதாக அந்த கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தன்னுடைய இரு நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவைத்திருக்கிறார். கார் ஓட்டுனரின் நண்பர்கள் இருவரும் குபேர்பூர் பகுதியில் ஏறிக் கொண்டனர். அதன் பிறகு அந்த மூவரும் இணைந்து அந்தப் பெண்ணை அருகில் உள்ள வயல் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து குற்றவாளியான கார் ஓட்டுநர் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.