மூடநம்பிக்கை என்பது மக்களை காலம் காலமாக மூட்டளாக்கி வருகிறது. நம்பிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்புவது என்பது சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியார், ஜோதிபா பூலே போன்ற தலைவர்கள் தொடர் பிரசாரம் செய்தபோதிலும், அது நின்றபாடில்லை.
பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்யப் பார்ப்பார்கள். பண மோசடி மட்டுமின்றி பல மோசமான சம்பவங்களையும் செய்கிறார்கள். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை நிர்வாணமாகப் பூஜை செய்ய வற்புறுத்தியிருக்கிறார். மராட்டியம் மாநிலம் நவி மும்பை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் மாந்திரீகம் உள்ளிட்ட விவகாரங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர் ஆக இருந்துள்ளார்.
அந்த நபரின் மைத்துனர், அதாவது மனைவியின் தம்பிக்குத் திருமணமாகவில்லை. நீண்ட காலமாகப் பெண் பார்த்தும் செட் ஆகவில்லையாம். இதனால் அவர்கள் குடும்பத்தினர் கவலையில் இருந்துள்ளனர். மாந்திரீகப் பூஜை செய்தால் திருமணமாகிவிடும் என அந்த நபர் கூறியிருக்கிறார். திருமணம் நல்லபடியாக நடக்க இதுபோன்ற பூஜை செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
அதன்படி தனது மனைவியையும் மாமியாரையும் கட்டாயப்படுத்தி நிர்வாண பூஜை செய்ய வற்புறுத்தியுள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு இருவரும் அவர் சொன்னதை எல்லாம் செய்த நிலையில் ஆடை இன்றி அவர்கள் பூஜை செய்யும் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனைவி மற்றும் அவரது தாயார் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
Read more: ‘உத்தரபிரதேச டைகர்’ என அழைக்கப்படும் மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்..!!