பீகாரில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்துள்ளது.. நவ.6-ம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 122 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவில் 67.14% வாக்குகள் பதிவாகி உள்ளது.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன..
பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட்டது.. இதன் மூலம் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் 123 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கலாம்.. இந்த நிலையில் பீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதை தெரிவிக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது..
வாக்குப்பதிவு முடிந்ததும், டுடேஸ் சாணக்யா, ஆக்சிஸ் மை இந்தியா, சிவோட்டர், சிஎஸ்டிஎஸ் மற்றும் டைம்ஸ் நவ் போன்ற நிறுவனங்கள் தங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன..
பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்
அதன்படி பீகாரில் மீண்டும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் முடிவுகள்
மொத்த தொகுதிகள் : 243
தேசிய ஜனநாயக கூட்டணி : 135 – 140 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 100 – 115 தொகுதிகள்
ஜன் சுராஜ் : 0
Matrise முடிவுகள்
மொத்த தொகுதிகள் : 243
தேசிய ஜனநாயக கூட்டணி : 147- 167 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 70 – 90தொகுதிகள்
ஜன் சுராஜ் : 0 – 2
People’s Insight முடிவுகள்
மொத்த தொகுதிகள் : 243
தேசிய ஜனநாயக கூட்டணி : 133 – 148 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 87- 102 தொகுதிகள்
ஜன் சுராஜ் : 0 – 5
People’s Pulse
மொத்த தொகுதிகள் : 243
தேசிய ஜனநாயக கூட்டணி : 133 – 159 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 71- 105 தொகுதிகள்
ஜன் சுராஜ் : 0 -5
NDTV முடிவுகள்
மொத்த தொகுதிகள் : 243
தேசிய ஜனநாயக கூட்டணி : 152 தொகுதிகள்
இந்தியா கூட்டணி : 84 தொகுதிகள்
ஜன் சுராஜ் : 0 – 5



