நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண்களை சரிபார்க்க நேரடி லிங்க் இதோ..

Neet UG results

நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேவு முகமை வெளியிட்டுள்ளது.

நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி நிலையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.


அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இளங்கலை NEET UG 2025-க்கு கிட்டத்தட்ட 23 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

NEET முடிவு 2025 உடன், NTA முதலிடம் பிடித்தவர்களின் பட்டியலையும் தகுதி கட்-ஆஃப்-ஐயும் வெளியிடும்.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங் செயல்பாட்டில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுபவர்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடநெறியில் சேர்க்கை வழங்கப்படும்.

NEET UG 2025 முடிவுகள்: neet.nta.nic.in வழியாக முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?

படி 1: neet.nta.nic.in க்குச் செல்லவும்.

படி 2: முகப்புப் பக்கத்தில் Result இணைப்பைத் தேடுங்கள்.

படி 3: தொடர முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 4: உங்கள் லாகின் விவரங்களை உள்ளிடவும்.

படி 5: உங்கள் NEET 2025 முடிவை பார்க்க முடியும்.

RUPA

Next Post

"MAYDAY… MAYDAY.. மின்சாரம் இல்லை" விமான விபத்துக்கு முன் விமானி கூறிய கடைசி செய்தி..

Sat Jun 14 , 2025
The audio of the pilot's statement before the crash has now been released.
SEC 255309034 b93d 1

You May Like