12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு புதிய மையம்… செப்.15 கடைசி நாள்…! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!

Tn School students 2025

12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் (2025- 26) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தேர்வு மையங்கள் அமைப்பதற்கான அவசியம் உள்ள பள்ளிகளை நேரில் ஆய்வு செய்த பின்னர், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பரிந்துரை செய்ய வேண்டும்.

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய மையங்கள் குறித்த தகவலை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது தவிர அரசின் விதிகளின்படி இல்லாத பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கக் கோரினால் சார்ந்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 10 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

அதேபோல், அரசின் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிப்படாது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய பொதுத் தேர்வு மையங்களுக்கான பரிந்துரை அறிக்கையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்வுத் துறை அலுலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: சொத்துக்களை பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை..!! வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்..!!

Vignesh

Next Post

குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா..? குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்..?

Thu Sep 4 , 2025
எந்த ஒரு வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வணங்குவதுதான் நம் மரபில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாடு அவசியம். ஆனால், சிலருக்கு தங்கள் குலதெய்வம் யார் என்பதே தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கான சில எளிய வழிபாட்டு முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : வீட்டு வாசல் வழிபாடு : முதலில், வீட்டின் தலைவாசலில் மஞ்சள், […]
God 2025

You May Like