சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை தவெக பயன்படுத்த தடை கோரிய மேல் முறையீட்டு வழக்கில் விஜய் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை தவெக பயன்படுத்த தடை கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் “ சிவப்பு, மஞ்சள் நிறத்தில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன அமைப்பின் கொடி உருவாக்கப்பட்டது.. இந்த சபையின் வர்த்தக முத்திரையாக பதிவு இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழும் பெறப்பட்டது..
இந்த சபையின் முதன்மை நிர்வாகிகள், ஊழியர்கள், முகவர்கள், வாரிசுகள் ஆகியோர் மட்டுமே இந்த முத்திரையை பயன்படுத்த முடியும்.. வேறு எந்த ஒரு நபரும் இந்த வர்த்தக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.. ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும் இதே நிறத்தை கொண்டுள்ளதால், இந்த கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.. ” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..
இந்த உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வு முன்பு பச்சையப்பன் மேல்முறையீடு செய்திருந்தார்.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்த மேல் முறையீட்டு மனு குறித்து 2 வாரங்களுக்குள் தவெக தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்..
Read More : விஜய்யை முதலில் தனது காருக்கு Tax கட்ட சொல்லுங்க.. அப்புறம் ஊழல் பற்றி பேசலாம்.. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு!