மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் ஊதிய பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என அனைத்துமே கேள்விக்குள்ளாக்குகிற வகையில் தொழிலுறவு சட்டத்தொகுப்பு 2020, சம்பளத் தொகுப்பு 2019, பணித்தலப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்டத்தொகுப்பு 2020, சமூக பாதுகாப்பு தொகுப்பு 2020 ஆகிய சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசு அதை நடைமுறைப்படுத்த நிர்வாக ரீதியிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டங்கள் கார்ப்பரேட் -இந்துத்துவ கூட்டணியின் வெளிப்பாடாடே ஆகும். இவை முதலாளிகளுக்கு கட்டற்ற அதிகாரத்தை தருகின்றன. இதில் 100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் ஆலை மூடலுக்கு அனுமதி தேவை என்றிருந்த நிலை 300 தொழிலாளர்கள் என மாற்றப்பட்டிருப்பது தொழிலாளர்களை சட்டப் பாதுகாப்பில் இருந்து வெளியே வீசி எறிவதே ஆகும். நிரந்தர நியமனங்களை காலி செய்து கூலி முறைமையை அரங்கேற்றுகிற ஏற்பாடு.
அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லை. நூற்று ஐம்பது ஆண்டுகால தொழிலாளர் போராட்டங்கள் ஈட்டித் தந்த உரிமைகளை முற்றிலுமாக நீர்த்துப் போகச்செய்யும் தொகுப்பு சட்டங்கள் ஏற்கத்தக்கதல்ல. அவை வன்மையான கண்டனத்துக்குரியது. எனவே தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங் களில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,சிபிஐ (எம்எல்) லிபரேசன், விசிக கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் டிச.8-ம் தேதி நடைபெறும் என தேர்தல்.



