2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர்.
திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே கடந்த வாரம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர். இதையடுத்து அவர்களும் திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அதிமமுக) அறிமுக விழா ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடந்த நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் முழுமூச்சாக தேர்தல் பணி மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது திமுகவிற்கு இது மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை முதன்முதலில் அங்கீகரித்த நாடு எது?. ஆச்சரியமான தகவல்!